Page Loader
மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! 
மும்பை கட்டிட விபத்தில் சிக்கியவர்கள் மேலும் 6 பேர் பிணமாக மீட்பு

மும்பை கட்டிட விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! 

எழுதியவர் Siranjeevi
May 01, 2023
01:57 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை அருகே கட்டிட விபத்தில் சிக்கிய மேலும் 6 பேர் உயிரிழந்ததாகவும், மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள வால்பாடா பகுதியில் அமைந்துள்ள வார்தமான் காம்பவுண்டில் 3 மாடி குடோன் கட்டிடமானது கடந்த நாள் முன்தினம் இடிந்து விழுந்துள்ளது. இடிந்த கட்டிடத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்கள் நவீன உபகரணங்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மும்பை 

மும்பை பிவண்டி கட்டிட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

தொடர்ந்து, 20 மணி நேரமாக போராடிய மீட்புப்பணியினர், ஒருவரை உயிருடன் மீட்டனர். அதேப்போல் இரவு முதல் காலை வரை 6 பேரை பிணமாக மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. சம்பவம் குறித்து காவல்துறை கட்டிட உரிமையாளர் இந்திராபால் பாட்டீல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இடிபாட்டுக்கு காரணமாக கட்டிடத்தின் மீது செல்போன் கோபுரம் வைக்கப்பட்டதாகவும் எடை தாங்காமல் கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.