Mphil பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் இல்லை: UGC எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
பல்கலைக்கழகங்களில் முதுகலை தத்துவ(Mphil) பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்று பல்கலைக்கழக மானியக் குழு(UGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனேவே, Mphil பட்டபடிப்பின் அங்கீகாரத்தை நீக்கி UGC உத்தரவிட்டிருந்தது.
மேலும், Mphil திட்டங்களை வழங்க வேண்டாம் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அறிவுறுத்தி இருந்தது.
ஆனால், அதை மீறி, சில பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து அந்த பட்டப்படிப்பை வழங்கி வருகின்றன.
அதனால், 2023-24ஆம் கல்வியாண்டுக்கான Mphil மாணவர் சேர்க்கையை நிறுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவிடப்பட்டுள்ளது.
பியூடியூ
'Mphil பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல': UGC
இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் UGC, " Mphil(முதுநிலை தத்துவம்) பட்டத்திற்கு ஒரு சில பல்கலைக்கழகங்கள் புதிதாக விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது UGCயின் கவனத்திற்கு தெரிய வந்துள்ளது. Mphil பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல." என்று கூறியுள்ளது.
UGCஇன் விதிமுறை எண்.14(பிஎச்டி பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறைகள்) விதிமுறைகள் 2022 குறித்து UGCயின் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விதிமுறை உயர் கல்வி நிறுவனங்கள் Mphil திட்டங்களை வழங்குவதை தெளிவாக தடை செய்கிறது.
வரும் கல்வியாண்டுக்கான Mphil சேர்க்கையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பல்கலைக்கழகங்களிடம் UGC அறிவுறுத்தியுள்ளது.