NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 

    எழுதியவர் Nivetha P
    May 08, 2023
    01:02 pm
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல் 
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்

    குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்.சி.ஆர்.பி.) தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு 7,105 பெண்கள், 2017ம் ஆண்டு 7,712 பெண்கள், 2018ம் ஆண்டு 9,246 பெண்கள், 2019ம் ஆண்டு 9,268 பெண்கள், 2020ம் ஆண்டு 8,290 பெண்கள் மாயமாகியுள்ளார்கள். இதன்படி, 5 ஆண்டுகளில் மொத்தம் 41 ஆயிரத்து 621 பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினரான கதிர் சின்ஹா கூறுகையில், சில காணாமல்போன கடத்தல் வழக்குகளில் சிறுமிகளும், பெண்களும் குஜராத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்கு அனுப்பப்படுவதை நான் கவனித்துள்ளேன் என்று கூறினார்.

    2/2

    அகமதாபாத் மற்றும் வதோதராவில் 4,722 பெண்கள் மாயம் 

    தொடர்ந்துப்பேசிய அவர், காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகளை காவல்துறை தீவிரமாக கையாளாத காரணத்தினால்தான் பெண்கள் கடத்தல் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இந்த வழக்குகள் கொலை வழக்குகளை விட தீவிரமானது. எனவே, ஒரு கொலை வழக்கினை விசாரிப்பது போல், காணாமல் போனோர் வழக்குகளையும் மிககடுமையாக காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அகமதாபாத் மற்றும் வதோதராவில் 2019-2020ஆண்டில் மட்டும் 4,722பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பேசிய குஜராத் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஹிரேன் பேங்கர், கேரளா பெண்கள் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 41000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    குஜராத்
    காவல்துறை
    காவல்துறை
    கடத்தல்

    குஜராத்

    ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம்  இந்தியா
    மோர்பி பால விபத்து: ரூ.14.62 கோடி இழப்பீட்டை கட்டியது ஓவேரா குழுமம்  இந்தியா
    குஜராத் மாநில போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து  ரயில்கள்
    எந்திரம் மூலம் தங்களை தாங்களே நரபலி கொடுத்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்! இந்தியா

    காவல்துறை

    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்  இந்தியா
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  தூத்துக்குடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  திருவண்ணாமலை
    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி

    காவல்துறை

    சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்  தமிழ்நாடு
    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  இந்தியா
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  தமிழ்நாடு
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு

    கடத்தல்

    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு  பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023