சென்னை, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வேலூர், சென்னை போன்ற இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக 1-5 வரையிலான ஆரம்பப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் மிதமான மழை பெய்வதால், பள்ளிகளும் கல்லூரிகளும் வழக்கம் போல இயங்கும் என சென்னை கலெக்டர் அறிவித்தார். இந்த நிலையில், குறிப்பாக, KTCC என குறிப்பிடப்படும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ஆகிய மாவட்டங்களில், இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள், மேற்கு திசை காற்றின் காரணமாக இன்று மாலை அல்லது இரவில் சென்னையில் மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.