Page Loader
அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
Aug 15, 2023
02:42 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, ஆகஸ்ட் 15 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆகஸ்ட் 16 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 21 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த 7 நாட்களுக்கும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை.

டவ்க்

சென்னையின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25- 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.