நீலகிரியில் நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் - தோட்ட தொழிலாளர்களுக்கு பரிசோதனை
காசநோய் இல்லா தமிழ்நாடு மாநிலத்தினை கொண்டு வரும் இலக்கினை தமிழக அரசு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல தரப்பட்ட முயற்சிகளை இதற்காக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதன் ஓர் பகுதியாக தமிழகத்தின் 23 மாவட்டங்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட 23 நடமாடும் காசநோய் ஆய்வகங்கள் ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் காசநோய் பரவலை முற்றிலும் தடுக்கும் நோக்கில் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த நடமாடும் ஆய்வகங்கள் கொண்டு காசநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.