கூட்டணி குறித்து இரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்: ம.நீ.ம கட்சி தலைவர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தேர்தல் கூட்டணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் இரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
'தஃக் லைஃப்' திரைப்படத்தின் முன்னேற்பாடுகளுக்காக வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவர், இன்று சென்னைக்கு திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களை சென்றிருந்த அவர், கூட்டணி விவகாரம், ம.நீ.ம கட்சியின் தேர்தல் நடவடிக்கை குறித்தும், கூட்டணி குறித்தும் இன்னும் இரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
இது வரை இது சார்ந்த முடிவு எடுக்கப்படவில்லை எனவும், கூட்டணி குறித்து கட்சியினரிடம் கலந்தாலோசித்து இரு தினங்களில் முடிவெடுத்து சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, மக்கள் நீதி மையம், திமுக கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
"இரு நாட்களில் அறிவிப்பு"
#WATCH | “2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன்”
— Sun News (@sunnewstamil) February 19, 2024
-நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பதில்
‘THUG LIFE’ படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன், இன்று சென்னை திரும்பியுள்ளார்#SunNews | #Kamalhaasan |… pic.twitter.com/UbPDKkZs8N