மிசா தாடை தழும்பு சர்ச்சை: சட்டமன்ற நிகழ்வு குறித்து முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி வீடியோ
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சு மற்றும் தாடையைத் தொட்டுக் காட்டிய பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மிசா கால நிகழ்வுகள் குறித்து பேசிய ஸ்டாலின், "சட்டமன்றத்தில் நடந்த சில சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது கையை வைத்துத் தாடையைக் காட்டியது ஒருவகையில் சரிதான்". "மிசா கைதிகளைக் காவலர்கள் தாக்கியபோது எனது தாடை உடைந்தது. அந்தத் தழும்பு இன்றளவும் என்னிடம் உள்ளது. மிசா சிறைக் கொடுமைகள் வரலாற்று உண்மை. யார் என்னைக் கொச்சைப்படுத்தினாலும் அந்த வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? pic.twitter.com/kzpwXi14L8
— M.K.Stalin (@mkstalin) September 10, 2026
அறிவுரை
விஜய்க்கு அறிவுரை மற்றும் குற்றச்சாட்டுகள்
அரசியலுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூறிய பொய் குற்றச்சாட்டுகளையே முதலமைச்சர் விஜயும் கூறிவருவதாக சாடிய ஸ்டாலின், சந்தேகம் இருந்தால் சட்டமன்ற நூலகத்திற்கு சென்று வரலாற்றைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், "சட்டமன்றத்தை ஒரு ரீல்ஸ் மன்றமாக மாற்றிவிட்டார் விஜய். தமிழ்நாட்டை முன்னேற்றுவது குறித்து விவாதியுங்கள்" என்றும், வாக்குறுதிகளான இலவச சிலிண்டர், மகளிர் உரிமைத் தொகை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற விவகாரங்களில் அரசு இன்னும் முழுமையாகச் செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சராக இருக்கும் விஜய் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.