
சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் சிறைக்கைதிகளின் எதிர்காலத்தினை மனதில் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒன்றாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிறைக்கைதிகள் நடத்துவதற்காக சிறைச்சாலைகள் அருகிலேயே தமிழக சிறைத்துறை பெட்ரோல் பங்குகளை திறந்து வருகிறது.
அதன்படி, மதுரை மாநகரில் சிறைக்கைதிகளால் நடத்தப்படும் Freedom-பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்கினை சிறைத்துறை அமைச்சர்.,ரகுபதி திறந்து வைத்துள்ளார்.
20 சிறைக்கைதிகள் கொண்டு இந்த பெட்ரோல் பங்க் செயல்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக முழுக்க முழுக்க பெண் கைதிகள் கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்க் அண்மையில் சென்னை புழல் சிறை அருகே திறக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இதில் வரும் வருவாய் கொண்டு ரூ.6000 வரை கைதிகளுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பெட்ரோல் பங்க் திறப்பு
#JustIN | சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறப்பு!#SunNews | #Madurai | #CentralPrison pic.twitter.com/zPKT1P76wj
— Sun News (@sunnewstamil) August 18, 2023