'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் 2021ல் 7,886 பேரும், இந்தாண்டு 8,771 பேரும் பயன்பெற்றுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பில்லாத பாடப்பிரிவுகள் நீக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேவையின் அடிப்படையிலான வேலைவாய்ப்பு அதிகமுள்ள பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் 10 பொறியியல்கல்லூரிகளில் ஜெர்மன் மாணவர்களுக்கு ஜாப்பானிய மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. யாருக்கு எது தேவையோ அதை அவர்கள் படிக்கிறார்கள். மொழிகளை திணிக்க கூடாது. தமிழகத்தில் தமிழ்,ஆங்கிலம் என்னும் இருமொழி கொள்கைத்தான். சர்வதேசமொழி ஆங்கிலம் இருக்கும்பொழுது இந்தி நமக்கு தேவையில்லை. அதனால் தான் புதிய கல்விக்கொள்கை வேண்டாம் என்று மாநில கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.