மேட்டுப்பாளையம்-சென்னை விரையும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து
செய்தி முன்னோட்டம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கனமழை காரணமாக பல்வேறு ரயில்கள் கடந்த சிலநாட்களாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் வெள்ளம் காரணமாக இன்று(டிச.,8)இரவு 9.21க்கு மேட்டுப்பாளையம்-சென்னைக்கு புறப்படவிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் மேட்டுப்பாளையம் ரயில் நிறுத்தத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் சேவையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலை ரயிலின் அடுத்த சேவை எப்போது?என்னும் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
நீலகிரி விரைவு ரயில் இன்று ரத்து! 🚆
— Sun News (@sunnewstamil) December 8, 2023
சென்னை வெள்ளம் காரணமாக, மேட்டுப்பாளையம் - சென்னை செல்லும் நீலகிரி விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு!#SunNews | #NilagiriExpress | @SalemDRM pic.twitter.com/OKxooMP96q