
அதிமுக - பாஜக கூட்டணி பிளவையடுத்து, இணையத்தில் ட்ரெண்டாகும் '#நன்றி_மீண்டும்வராதீர்கள்'
செய்தி முன்னோட்டம்
அதிமுக, நேற்று அதன் செயற்குழு கூட்டத்தை கூட்டி, பாஜக-வின் தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவெடுத்து அறிவித்தது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும், அதன் பின்னர் வரவுள்ள சட்டமன்ற தேர்தலிலும், ஆளும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தது.
இதனை, அதிமுக கட்சியின் சமூகவலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதை தொடர்ந்து, அக்கட்சியின் தொண்டர்களும், பாஜகவின் எதிர்ப்பாளர்களும் ரோட்டில் வெடி வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.
இதோடு, '#நன்றி_மீண்டும்வராதீர்கள்' என்ற ஹாஷ்டேக்-ம் அவர்கள் வைரல் செய்து வருகின்றனர்.
எனினும் இந்த முடிவிற்கு பிறகு, கட்சியின் பொதுச்செயலாளரான ஈபிஎஸ், தேர்தல் முடியும்வரை, கட்சி தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும், பொதுவெளியில், பாஜக பற்றி அவதூறாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது
ட்விட்டர் அஞ்சல்
#நன்றி_மீண்டும்வராதீர்கள்
Right now 😂😂😂
— 🖤♥️தூய துறவி (@iam_Vsk) September 25, 2023
👇#நன்றி_மீண்டும்வராதீர்கள் pic.twitter.com/Q1XLv6Pg47
ட்விட்டர் அஞ்சல்
#நன்றி_மீண்டும்வராதீர்கள்
பாஜகவுடன் கூட்டணி இல்லை.#நன்றி_மீண்டும்வராதீர்கள் pic.twitter.com/zx59E93617
— AIADMK TV (@aiadmktv) September 25, 2023
ட்விட்டர் அஞ்சல்
#நன்றி_மீண்டும்வராதீர்கள்
"அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை" ✌️#AIADMK 🔥#நன்றி_மீண்டும்வராதீர்கள் pic.twitter.com/t8c6UiQPZg
— AIADMK Trends™ (@AIADMKTrends) September 20, 2023