Page Loader
எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்
எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்

எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்

எழுதியவர் Nivetha P
Dec 01, 2023
02:49 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகா, தும்கூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் கேரள-திருச்சூர் பகுதியினை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன்(21)எம்பிபிஎஸ் பட்டப்படிப்பினை படித்து வந்துள்ளார். இவரது தந்தை இத்தாலியில் பணிபுரிந்து வருகிறார், அந்த மாணவன் தனது தாயாருடன் கல்லூரி அருகே ஓர் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அண்மையில் ஆதித் பாலகிருஷ்ணன் தனது பட்ட படிப்பினை முடித்த நிலையில் கடந்த 29ம்.,தேதி மருத்துவக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளார். அன்று சுமார் 11 மணியளவில் ஆதித் பாலகிருஷ்ணன் வீடு திரும்பியுள்ளார். அதன்பின்னர் தனது கார் பார்க்கிங்.கில் தனது குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. தன்னை பாம்பு கடித்ததை அந்த மாணவரும் உணரவில்லை, அவரது குடும்பத்தாருக்கும் இது தெரியவில்லை.

மரணம் 

வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை 

இந்நிலையில் அவர்கள் வீட்டிற்குள் படுக்க சென்ற நிலையில், தனது அறைக்கு சென்ற ஆதித் பாலகிருஷ்ணன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவரை விஷ பாம்பு கடித்துள்ளது. அதன் காரணமாக தான் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். ஆதித் பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே ஓர் பூங்கா உள்ளதாம். அங்கிருந்து இந்த விஷப்பாம்பு வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர்.