LOADING...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை புறக்கணித்த மாணவி: வைரலாகும் வீடியோ
இந்த நடவடிக்கையால் விழா நிகழ்வில் சில நேரங்கள் பரபரப்பு நிலவியது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை புறக்கணித்த மாணவி: வைரலாகும் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2025
05:15 pm

செய்தி முன்னோட்டம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 32வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவியை புறக்கணித்து ஒரு மாணவி பட்டம் பெற மறுத்த சம்பவம், தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, விழா மேடையில் கைநீட்டி பாராட்டு தெரிவித்த ஆளுநரிடம் செல்லாமல், நேரடியாக பல்கலைக்கழக துணைவேந்தர் என். சந்திரசேகரிடம் இருந்து பட்டம் பெற்றார். அவரது இந்த நடவடிக்கையால் விழா நிகழ்வில் சில நேரங்கள் பரபரப்பு நிலவியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விளக்கம்

மாணவியின் விளக்கம்

சம்பவத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஜீன் ஜோசப், "தமிழக மக்களுக்கு விரோதமான கருத்துகளும் செயல்களும் ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கொண்டு வருகிறார். அவர் தமிழர் அடையாளம், கலாசாரம் மற்றும் திராவிட சிந்தனையை எதிர்த்து கருத்துகள் கூறியுள்ளார். எனவே, அவரிடம் இருந்து பட்டம் பெறுவது எனக்கு ஏற்க முடியாத ஒன்று," என்றார். "எனக்கும் ஆளுநருக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனால், நான் திராவிட மாடலை நம்புகிறேன். அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து பட்டம் பெற முடியாது என்பதே என் நிலைப்பாடு," என மாணவி கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post