Page Loader
டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி 

டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Mar 10, 2024
05:53 pm

செய்தி முன்னோட்டம்

கேஷப்பூர் மண்டி அருகே டெல்லி ஜல் போர்டு ஆலைக்குள் இருந்த 40 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் இன்று உயிரிழந்ததாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் இறந்து கிடந்தார் என்று அவர் கூறியுள்ளார். "முதற்கட்ட தகவலின்படி, இறந்தவர் சுமார் 30 வயதுடைய ஆண் ஆவார். அவர் எப்படி போர்வெல் அறைக்குள் நுழைந்தார், எப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார் என்பதை போலீசார் விசாரிப்பார்கள்" என்று அமைச்சர் அதிஷி ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும், அந்த நபரை மீட்க முயற்சித்த தேசிய பேரிடர் மீட்புப் படைக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

டெல்லி 

ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைக்க உத்தரவு 

பிற்பகல் 3 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து அந்த நபரின் உடல் மீட்கப்பட்டது. அவரை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.15 மணியளவில், யாரோ ஒருவர் திருவாடுவதற்காக தங்கள் அலுவலகத்திற்கு நுழைந்து பின்னர் அவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டதாக ஜல் போர்டு ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். NDRF மற்றும் டெல்லி காவல்துறையின் குழுக்களுடன் மொத்தம் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அனைத்து பயன்படுத்தப்படாதா ஆழ்துளைக் கிணறுகளுக்கும் 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.