
தவறான டெர்மினலை அடைந்ததற்கு பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய நபர்
செய்தி முன்னோட்டம்
விமானத்தில் பயணம் செய்வதற்கு விமான நிலையத்திற்கு சென்ற ஒரு நபர், தவறான டெர்மினலை அடைந்ததற்கு அரசாங்கத்தையும் பிரதமர் மோடியையும் குற்றம் சாட்டும் வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
உஜ்வல் திரிவேதி என்ற நபர், மும்பையிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்வதற்கு சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். உள்ளே சென்றதும் தான் அவருக்கு தெரிந்திருக்கிறது அவர் உள்நாட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்பது.
இதை ஒரு வீடியோவில் பதிவு செய்த அவர் தன் டிக்கெட்டையும் பதிவு செய்து, அதில் விமான டெர்மினல் தவறாக கூறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு அந்த விமான நிறுவனம் தற்போது மன்னிப்பு கோரி இருக்கும் நிலையில், அவர் ஏன் பிரதமரைக் குற்றம்சாட்டினார் என்பது தெரியாமல் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்
ட்விட்டர் அஞ்சல்
விமான நிறுவனம் செய்த தவறுக்கு பிரதமர் மோடியை குற்றம்சாட்டிய நபரின் வைரல் வீடியோ
My experience with @AkasaAir pic.twitter.com/emDyT5IzpS
— Ujjawal Trivedi (@iujjawaltrivedi) February 22, 2023