LOADING...
வைரல் வீடியோ: எச்சில் துப்புவதற்கு விமான ஜன்னலை திறக்க சொன்ன பயணி
விமானத்தில் நடந்த ஒரு நகைசுவை சம்பவம்

வைரல் வீடியோ: எச்சில் துப்புவதற்கு விமான ஜன்னலை திறக்க சொன்ன பயணி

எழுதியவர் Sindhuja SM
Jan 23, 2023
09:03 pm

செய்தி முன்னோட்டம்

குட்காவை துப்புவதற்காக விமானத்தின் ஜன்னலை திறக்குமாறு விமானப் பணிப்பெண்ணிடம் ஒருவர் கூறிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் இதை பார்த்து அதிர்ச்சியடைத்தாலும், விமான பயணிகளின் சிரிப்பொலிகள் பார்ப்பவர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறது. கோவிந்த் ஷர்மா என்ற இன்ஸ்டாகிராம் பயனரால் "குட்காவை நேசிக்கும் உங்கள் நண்பரை டேக் செய்யவும்" என்ற தலைப்பில் வீடியோ பகிரப்பட்டதை அடுத்து இந்த வீடியோ வைரலானது. இந்த வேடிக்கையான சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடந்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு நபர், "ஒரு நிமிஷம்! கொஞ்சம் ஜன்னலைத் திறக்குறீங்களா? நான் குட்காவை துப்பனும்" என்று விமானப்பணி பெண்ணிடம் கேட்கிறார். அதை கேட்ட அந்த விமான பணிப்பெண்ணும் சக பயணிகளும் விழுந்துவிழுந்து சிரிக்கின்றனர். அந்த சிரிப்பு பார்ப்பவையாளர்களையும் தொற்றிக்கொள்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

குட்கா துப்புவதற்காக ஜன்னலை திறக்க சொன்னவரின் வீடியோ