Page Loader
மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி
இது பாஜக கட்சியினரை முகம் சுழிக்க வைத்துள்ளது.

மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி

எழுதியவர் Sindhuja SM
May 10, 2023
10:57 am

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று(மே 9) பாராட்டியுள்ளார். இது பாஜக கட்சியினரை முகம் சுழிக்க வைத்துள்ளது. மம்தா பானர்ஜி "பிளாக்மெயில்" செய்ய முடியாத ஒரு நபர் என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி, ஆளும் கட்சிக்கு பயப்படாத, உண்மையான ஒரு எதிர்க்கட்சியே நாட்டுக்கு தேவை என்று தெரிவித்தார். "ஆட்சியில் இருப்பவர்களால் அச்சுறுத்த முடியாத ஒரு உண்மையான எதிர்க்கட்சி நாட்டுக்கு தேவை என்று நான் நினைக்கிறேன்," என்று சுவாமி கூறியுள்ளார். கொல்கத்தாவில் FICCI ஏற்பாடு செய்திருந்த ஊடாடும் அமர்வில் பேசும் போது பாஜக தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

details

மம்தா பானர்ஜி ஒரு தைரியமான பெண்மணி: சுப்பிரமணியன் சுவாமி

"எனக்கு இன்று நிறைய பேரை தெரியும். அவர்களெல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செய்லபடமாட்டார்கள். ஏனென்றால் ED அவர்களுக்கு எதிராக திரும்பி விடும் அல்லது வேறு ஏதாவது மாறிவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல" என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது. "மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் ஒரு தைரியமான பெண்மணி. அவர் கம்யூனிஸ்டுகளை எப்படி எதிர்த்துப் போராடினார் என்று நாம் பார்த்திருக்கிறோம். அவரை 10 நாட்களுக்கு முன்பு நான் சந்தித்தேன், ஆனால் அது யாருக்கும் தெரியாது," என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மம்தா பானர்ஜி தைரியமான ஒரு பெண் தலைவர் என்று அவர் பாராட்டியுள்ளார்.