ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மிக முக்கியமான 7 வாக்குறுதிகளை அறிவித்தார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே.
வரும் 25ம் தேதி 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், இங்கு பாஜக-காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடக்கவுள்ள இத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலின் ஓர் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே இன்று(நவ.,20) மல்லிகார்ஜூன் கார்கே தனது முக்கியமான 7 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தேர்தல்
ரூ.500க்கு சமையல் எரிவாயு விநியோகம்
அதன்படி ராஜஸ்தானின் அனுப்கார் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மல்லிகார்ஜூன் கார்கே, முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்,
ரூ.500க்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும்,
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும்,
கிருஹ லட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பெண்களுக்கும் ரூ.10,000 வழங்கப்படும்,
மாட்டு சாணம் கொள்முதல் செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், 'இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், மிக்பெரிய அணைகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை உருவாக்கியது காங்கிரஸ்' என்றும்,
'அதனை பாஜக அரசு தற்போது சிதைத்து வருகிறது' என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.