Page Loader
மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார் 
மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்

மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார் 

எழுதியவர் Nivetha P
May 02, 2023
01:42 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், எழுத்தாளருமான அருண் மணிலால்(89) இன்று(மே.,2)மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மணிலால்காந்தி மற்றும் சுசிலா மஷ்ருவாலா தம்பதிக்கு மகனாக ஏப்ரல்14, 1934ம்ஆண்டு பிறந்தார். இவர் ஒரு ஆர்வலராக தனது தாத்தா மகாத்மாகாந்தியின் அடிச்சுவடுகளை பின்பற்றினாலும் அவரது துறவு வாழ்க்கையினை தவிர்த்துவிட்டார். பெளத்தசமய, இந்துசமய, இஸ்லாமிய தத்துவங்களால் கவரப்பட்ட இவர் கடந்த 1987ம்ஆண்டு தனது மனைவி சுனந்தாவுடன் அமெரிக்காவில் குடியேறி மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணியினை மேற்கொண்டுள்ளார். மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையினை அமெரிக்காவில் பரப்பியஇவர், 2016ம் ஆண்டுவரை நியூயார்க்கில் வசித்து வந்தநிலையில், பின்னர் இந்தியாவிற்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இறுதிச்சடங்கு இன்று பிற்பகலில் கோலாப்பூரில் நடைபெறும் என அவரது மகன் துஷார்காந்தி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post