Page Loader
இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம்
ஓலா, உபர் டிரைவர்கள் ரைடைக் கேன்சல் செய்தாலும் அபராதம்

இனி, ஓலா, உபர் டிரைவர்கள் ரைடை கேன்சல் செய்தாலும் அபராதம்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 30, 2023
04:40 pm

செய்தி முன்னோட்டம்

உபர் மற்றும் ஓலா உள்ளிட்ட கேப் வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியும் கார் ஓட்டுநர்கள், ஒரு ரைடைக் கேன்சல் செய்தால், அதற்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அபராதம் செலுத்த வேண்டும் காராஷ்டிரா அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது அரசு அமைத்த குழுவொன்று. பெரும்பாலான நேரங்களில் உபர் மற்றும் ஓலா கார் ஓட்டுநர்கள் ஒரு ரைடை ஏற்றுக் கொண்டு, பின்பு அதனை கேன்சல் செய்வது அதிகமாகிவிட்டது. பயணிகள் ஒரு ரைடைக் கேன்சல் செய்தால், அவர்களிடம் குறிப்பிட்ட நிறுவனங்கள் அபராதம் வசூலிப்பது போல, கேப் ஓட்டுநர்கள் ரைடைக் கேன்சல் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது இந்தச் சிறப்புக் குழு.

மகாராஷ்டிரா

வேறு என்னென்ன பரிந்துரைகள்? 

இது மட்டுமின்றி, ஒரு கேப் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையில் இல்லையென்றால், அதனைச் சேவையில் இருந்து நீக்கும் அதிகாரத்தை அந்தந்த RTOவுக்கு வழங்குவது, அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரை மட்டும் கேபுக்கான காத்திருப்பு நேரத்தை அமல்படுத்துவது எனப் பல்வேறு பரிந்துரைகள் முன்மொழியப்பட்டிருக்கின்றன. இந்தப் பரிந்துரைகளை 2020-ம் ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட Motor Vehicle Aggregators Guidelines-ன் அடிப்படையிலேயே முன்மொழிந்திருக்கிறது மகாராஷ்டிர அரசு அமைத்த சிறப்புக் குழு. மேற்கூறிய வகையில் அக்ரிகேட்டர் வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அமைச்சகம், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தங்களுக்கான விதிமுறைகளை அமல்படுத்த அறிவுறுத்தியிருந்தது. தற்போது அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசு, முதல் முறையாக தங்கள் மாநிலத்தில் அக்ரிகேட்டர்களுக்கான புதிய விதிமுறைகளைக் அமல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.