NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு?
    மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு

    மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவு; வெற்றி யாருக்கு?

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 21, 2024
    08:00 pm

    செய்தி முன்னோட்டம்

    புதன்கிழமை (நவம்பர் 20) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் 65.1% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இது 1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது அதிக வாக்குப்பதிவு மற்றும் ஒரு தசாப்தத்தில் அதிக வாக்குகள் இப்போதுதான் பதிவாகியுள்ளது.

    இந்த எண்ணிக்கை 2004 மற்றும் 2014 தேர்தல்களில் காணப்பட்ட 63.4% வாக்குப்பதிவை மிஞ்சியுள்ளது.

    இது மும்பையின் நகர்ப்புற பங்கேற்பு 54% இல் பின்தங்கியிருந்தாலும் அதிகரித்த வாக்காளர் ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது.

    குறிப்பிடத்தக்க வகையில், நக்சல்களால் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மற்றும் நாசிக் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே சமயம் மராத்வாடாவின் சராசரி 69.65%, 46 இடங்களில் 20 இடங்கள் 70% பங்கேற்பைக் கண்டது.

    மும்பை

    மும்பையில் வாக்கு சதவீதம் குறைவு

    மாறாக, புறநகர் மும்பை 39.34% ஆக குறைந்துள்ளது. ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) ஆகிய இரு தரப்பும் வெற்றியில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்றாலும், அதிக வாக்குப்பதிவை அரசியல் வல்லுநர்கள் பெரும்பாலும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக கருதுகின்றனர்.

    288 இடங்கள் கொண்ட சட்டசபையில் 150 இடங்களை ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு எக்ஸிட் போல்கள் சாதகமாக உள்ளன.

    இருப்பினும், சில கணிப்புகள்இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் அல்லது எம்விஏ மயிரிழையில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

    எனினும், பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிகரித்த வாக்குப்பதிவை ஒரு நேர்மறையான அறிகுறியாகக் குறிப்பிடுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    தேர்தல்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மகாராஷ்டிரா

    டெல்லி, புனேயில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல் புது டெல்லி
    மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார் முதல் அமைச்சர்
    மகாராஷ்டிராவில் 18 இடங்களில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் இந்தியா
    யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை சிபிஐ

    தேர்தல்

    இன்று இங்கிலாந்து பொது தேர்தல்: ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? இங்கிலாந்து
    இங்கிலாந்து பொதுத் தேர்தல்கள் ஏன் எப்போதும் வியாழக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன  இங்கிலாந்து
    அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி?  ஜம்மு காஷ்மீர்
    விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் இடைத்தேர்தல்

    இந்தியா

    உலக நன்மைக்காகவே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது இந்தியா; அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கருத்து உலகம்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல் ஆர்பிஐ
    இந்தியாவில் அதிகரித்து வரும் வாட்ஸ்அப் ஹேக்கிங் வழக்குகள்; தப்பிப்பது எப்படி? வாட்ஸ்அப்
    திரும்ப வருகிறார் 90ஸ் கிட்ஸ்களின் அபிமான சூப்பர் ஹீரோ சக்திமான்; டீசர் வெளியானது பர்ஸ்ட் லுக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025