LOADING...
அஜித் பவார் முதல் பிபின் ராவத் வரை:விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்
அஜித் பவார் இன்று காலை பார்மதியில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார்

அஜித் பவார் முதல் பிபின் ராவத் வரை:விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2026
11:28 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவருமான அஜித் பவார் இன்று (ஜனவரி 28, 2026) காலை பார்மதியில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார். தனது சொந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது நிகழ்ந்த இந்த துயரம், இந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவாரின் மறைவை தொடர்ந்து, இந்திய வரலாற்றில் இதுபோன்று ஆகாய விபத்துகளில் நாம் இழந்த பிற முக்கியப் பிரமுகர்களை பற்றிய நினைவுகள் மீண்டும் மேலெழுந்துள்ளன. இந்தியாவின் செல்வாக்கு மிக்க பல தலைவர்கள் விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். ஒரு பார்வை:

அரசியல்

அரசியல் களத்தில் பேரிழப்புகள்

1973-ல் முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலம் டெல்லி அருகே நடந்த விமான விபத்தில் காலமானார். 1980-ல், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகனும், இந்தியாவின் இளம் தலைவராக கருதப்பட்டவருமான சஞ்சய் காந்தி, டெல்லி சப்தர்ஜங் விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். 2001-ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாதவ்ராவ் சிந்தியா, உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தனது 46-வது வயதில் காலமானார். 2009-ல் ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, நல்லமலா காடுகளில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கடந்த ஆண்டு குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி லண்டன் செல்லும் வழியில் விமான விபத்தில் பலியானார்.

மற்ற பிரபலங்கள்

ராணுவ மற்றும் கலைத்துறையின் பிரபலங்களும் விபத்தில் மரணித்துள்ளனர்

அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், 2021-ல் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது ராணுவ ரீதியாகப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. கலைத்துறையை பொறுத்தவரை, 2004-ல் நடிகை சவுந்தர்யா தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூரிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement