Loading...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக அதிரடி திட்டம், திமுக களம் இறங்குவதால் மும்முனை போட்டி உறுதி
அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக அதிரடி திட்டம், திமுக களம் இறங்குவதால் மும்முனை போட்டி உறுதி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
10:30 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் அட்டவணை: வேட்புமனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9 வேட்புமனு தாக்கல் முடிவு: செப்டம்பர் 16 மனுக்கள் பரிசீலனை: செப்டம்பர் 17 மனு திரும்பப்பெற கடைசி நாள்: செப்டம்பர் 19 வாக்குப்பதிவு: அக்டோபர் 6 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: அக்டோபர் 9

பின்னணி

தொகுதிகள் காலியான பின்னணி

2026 சட்டமன்றப் பொது தேர்தலில் மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் போட்டியிட்ட பி. சத்யபாமாவும் வெற்றி பெற்றனர்.

இருப்பினும், இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் (TVK) இணைந்ததால் இத் தொகுதிகள் காலியாயின.

தவெக சார்பில் மீண்டும் இவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக

திமுகவின் திடீர் முடிவு

ஆரம்பத்தில் இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக ஆலோசித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது திமுக நேரடியாகக் களமிறங்க முடிவு செய்துள்ளது.

போட்டியைத் தவிர்த்தால் எதிர்த்தரப்புகளின் விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதைக் கருத்தில் கொண்டு திமுக தலைமை இம்முடிவை எடுத்துள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் விலகலுக்குப் பாடம் புகட்டவும், தொகுதிகளை மீண்டும் கைப்பற்றவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர களப்பணியைத் தொடங்கியுள்ளார்.

விருப்ப மனுக்கள் விநியோகம் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர் அறிவிப்பு திங்கட்கிழமைக்குள் வெளியாகும் எனத்தெரிகிறது.

மேலும், பாமக உடனான கூட்டணியை உறுதிசெய்து பிரசாரத்தை வலுப்படுத்தவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.

இதனால் இத்தொகுதிகளில் அதிமுக, திமுக மற்றும் தவெக இடையே வலுவான மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

ADVERTISEMENT