
மதுரை-தூத்துக்குடி எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இல்லை
செய்தி முன்னோட்டம்
மதுரை - தூத்துக்குடி இடையே அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது.
முக்கியமான தொழில்வளழித்தடமாக பார்க்கப்படும் இந்த சாலை, தூத்துக்குடியில் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும்.
இதில் பல்வேறு கனரக வாகனங்களும் பயணிப்பதால், இந்த சாலை குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.
மேலும், மின் விளக்கு பராமரிப்பும் இல்லை என சுற்றுபுறவாசிகள் குறைபட்டு வந்த நிலையில், இம்மாத துவக்கம் முதல் தமிழகத்தின் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முறையான பராமரிப்பில்லாத சாலைக்கு எதற்கு சுங்கக்கட்டணம் என பொதுமக்கள் கொதித்தனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் மாங்குளம் பகுதியில் உள்ள எலிபார்த்தி சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலைகள் விரைவில் பழுது பார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மதுரை: எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு ரத்துhttps://t.co/citSVa6e6c#Madurai #tollbooth #dailythanthi #dt #dtnews
— DailyThanthi (@dinathanthi) September 2, 2024