
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகைத்தருகிறார்.
அதன்படி நாளை(பிப்.,18) திரவுபதி முர்மு அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வருகிறார்.
இதனைதொடர்ந்து மதியம் 12 மணியளவில் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
அதன்பின்னர் அவர் விமானம் மார்க்கமாக அங்கிருந்து கோவைக்கு செல்கிறார் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாளை(பிப்.,18) ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்யவுள்ள நிலையில், சமீபத்தில் அவருடைய பாதுகாப்பு குழுவினர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைதொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய தடையில்லை என்று காவல் ஆணையர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை
#மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை #தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் #தடையில்லை: காவல் ஆணையர் https://t.co/4mWtAUHSZi
— Dinakaran (@DinakaranNews) February 17, 2023