
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் இன்று நிரூபர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கர் நிலத்தினை அப்போதைய அதிமுக அரசு அளித்தது.
இதனையடுத்து மத்திய அரசு கூடுதலாக 22ஏக்கர் நிலம் கேட்டது.
அந்த நிலத்தை கொடுக்க நாடாளுமன்றம் தாமதப்படுத்தியதால் தான் கட்டுமான பணிகள் துவங்காமல் நின்று போனது என மத்திய மந்திரி கூறியதை ஏற்க முடியாது.
தமிழக முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என தொடர்ந்து பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறார் என கூறினார்.
மதுரையையடுத்து கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
ஜப்பான் நிறுவனம்
2028ம் ஆண்டு தான் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தகவல்
இதனை தொடர்ந்து பேசிய அவர், மதுரையை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
ஆனால் தமிழகத்திற்கு மட்டும் ஜப்பான் ஜைக்கா நிறுவனம் நிதி வழங்கும் என கூறுகிறார்கள்.
நான் சென்ற வாரம் ஜப்பான் சென்றிருந்த பொழுது, மதுரை எய்ம்ஸ்க்கு உடனடியாக நிதி அளிக்க கோரினோம்.
அதற்கு கூட்டத்தில், இதன் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டு இறுதியில் துவங்கி 2028ம் ஆண்டு தான் நிறைவு பெறும் என்று கூறினார்கள் என்பதை தெரிவித்தார்.
மேலும் இது தான் உண்மை நிலவரம், மருத்துவமனை பணிகள் முடிந்துவிட்டது என்று மத்திய அரசு கூறுவது சரியானது அல்ல என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.