LOADING...
தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை!
தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை!

எழுதியவர் Vasuki
May 12, 2026
11:59 am

செய்தி முன்னோட்டம்

சட்டமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில், திருப்பத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, நாளை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளது. இந்தச் சூழலில், திருப்பத்தூர் தொகுதியில் வெறும் 'ஒரே ஒரு ஓட்டு' வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதிக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை

நீதிமன்றத் தடை

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும், திமுக வேட்பாளர் பெரியகருப்பனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், சீனிவாச சேதுபதி ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தபால் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிவு குறித்த இறுதித் தீர்ப்பு வரும் வரை அவர் சட்டமன்ற நடவடிக்கைகளில் வாக்களிக்க முடியாது எனத் தெரிகிறது.

அதிமுக-வின் ஆதரவு

பலமான நிலையில் விஜய்

முதல்வர் விஜய்யின் அரசுக்கு இந்த உத்தரவு ஒரு தார்மீகப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், அவரது மெஜாரிட்டியில் பெரிய பாதிப்பு இருக்காது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே அதிமுக-வின் சி.வி.சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவு தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், ஒரு எம்.எல்.ஏ வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டாலும், இதர உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வர் விஜய் எளிதாகப் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

பரபரப்பான அரசியல் களம்

அனல் பறக்கும் விவாதம்

"திருப்பத்தூர் தொகுதியில் மக்களின் தீர்ப்பைத் திருடிவிட்டார்கள்" எனத் திமுக தரப்பு விமர்சித்து வரும் நிலையில், "சட்ட ரீதியாக இந்தச் சிக்கலை எதிர்கொள்வோம்" எனத் தவெக தரப்பு தெரிவித்துள்ளது. ஒரே ஒரு ஓட்டு ஒரு எம்.எல்.ஏ-வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருப்பது அந்தத் தொகுதியிலும், தமிழக அரசியலிலும் திருப்பமாக அமைந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தவெக அரசின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் முக்கிய நகர்வாகும்.

Advertisement