
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை: சென்னை உயர் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
முன்னதாக அதிமுகவிலிருந்து பிளவுபட்ட ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகள், அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த நீதிமன்ற உதவியை நாடியது.
வழக்கு விசாரணை காலத்தில், இவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது.
அதில், அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நிரந்தர தடையாக மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை!
#JUSTIN | சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் தரப்பு தகவல்#SunNews | #OPS | #MadrasHC | #ADMK https://t.co/qmnxLzk2F2
— Sun News (@sunnewstamil) March 18, 2024