திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது
திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் கேரளா மாநில ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. அங்கு ஒரு குழுவாக அமர்ந்து 10 பேர் காகிதத்தில் நாம் சொல்லும் எண்களை எழுதிக்கொண்டு, பணத்தை பெற்றுக்கொள்வர். அதன் பின்னர் இந்த ஒரு நம்பர் லாட்டரிக்கான முடிவுகள் 3 மணிக்கு மேல் கேரளாவில் வெளியாகும் பட்சத்தில் அதனை இங்கு பணம் கட்டி சீட்டு வாங்கியோருக்கு தெரிவிக்கின்றனர். இந்த லாட்டரியானது 1,2,3,4,5,6 என இலக்கம் இருந்தால் அதில் 5 இலக்கம் எண்ணை குறிப்பிட்டு அந்த எண் முடிவு வாயிலாக வரும் நிலையில், வெற்றிப்பெற்றோருக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒரு டிக்கெட்டின் விலை ரூ.120 வரை விற்பனை செய்வதாக தகவல்
அதனைதொடர்ந்து அதில் ரூ.2 லட்சம், 25,000ரூ, 100ரூ, 50ரூ எனவும் பரிசுத்தொகைகள் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.5 முதல் ரூ.120வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட காவல் ஆணையர் சத்ய பிரியா உத்தரவின் பேரில், பாலக்கரை காவல்நிலைய தனிப்படை காவலர்கள் மணிகண்டன், கருப்பையா, பூபதி, செல்வம் ஆகியோரை கைது செய்துள்ளார்கள். இது குறித்து முன்னதாக சத்ய பிரியா கூறுகையில், வெளிமாநில லாட்டரிகளை இங்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 1 நம்பர் லாட்டரி விற்பனை முழுமையாக தடைச்செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே கைதான செல்வம் என்பவரது உறவினர் இளையராஜா இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.