Page Loader
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 28, 2024
07:24 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் இலங்கை கடற்படையால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கவலை எழுப்பியுள்ளார். செப்டம்பர் 21 அன்று மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி தனது கடிதத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா இந்த பகுதியில் சிறு-குறு மீனவர்களின் அவல நிலையை எடுத்துரைத்து, இந்த விவகாரத்தை தனது கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது கவலையளிக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

கடலில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணி

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், ஆபத்தில் சிக்கிய இலங்கைப் படகை மீட்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிகாரிகளிடம் உதவி பெற அவர்கள் முயற்சித்த போதிலும், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன. ராகுல் காந்தி தனது கடிதத்தில் மீனவர்களை விடுவிப்பதற்கும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்பப் பெறுவதற்கும் விரைவான இராஜதந்திர முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தி, இந்த விஷயத்தில் அரசாங்கம் ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாம் நமது மீனவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்று ராகுல் காத்து கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.