LOADING...
சட்டப்பேரவை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்; 13 காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை
சட்டப்பேரவை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

சட்டப்பேரவை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்; 13 காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து ஆளுநர் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது. தேசிய கீதம் மற்றும் மரபுகள் சார்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஆனால், தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, இறுதியில் மட்டுமே தேசிய கீதத்தை இசைக்கும் முறையைப் பின்பற்றி வருகிறது. தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதே ஆளுநரின் நிலைப்பாடு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்ச்சை

"அரசு உரையில் உண்மைக்கு புறம்பான கருத்துகள்"

மேலும், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில பகுதிகள் உண்மைகளுக்குப் புறம்பாகவும், ஆளுநரின் கருத்துக்களுக்கு முரணாகவும் இருந்ததால், அவற்றை வாசிப்பதில் தார்மீக ரீதியாக உடன்பாடு இல்லை என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதோடு 13 காரணங்களை பட்டியலிட்டு ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவை என்பது ஜனநாயகத்தின் உயரிய தளம், அங்கு மரபுகள் மீறப்படுவதை ஏற்க முடியாது என்ற அடிப்படையில் ஆளுநர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஆளுநருக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே நீடித்து வரும் மோதல் போக்கு, தற்போது தேசிய கீதம் மற்றும் மாநில மரபுகள் சார்ந்த விவாதமாக உருவெடுத்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement