சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
செய்தி முன்னோட்டம்
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
இவரது பிறந்தநாள் இன்று(அக்.,31) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் தேசிய ஒற்றுமை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில், குஜராத் மாநில நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்ட வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று ஓடியுள்ளார்.
இந்த வீடியோ பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒற்றுமைக்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
ஒற்றுமை ஓட்டம்
#WATCH | சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ஒற்றுமை ஓட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு!#SunNews | @DrTamilisaiGuv | #TamilisaiSoundararajan pic.twitter.com/BnEHpI6eYM
— Sun News (@sunnewstamil) October 31, 2023