
தேமுதிக சார்பாக விருதுநகரில் களமிறங்குகிறார் கேப்டன் மகன் விஜயபிரபாகரன்
செய்தி முன்னோட்டம்
அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், செய்திகளின்படி, தேமுதிக.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் தேமுதிக சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்களை கட்சி அலுவலகத்திற்கு வருமாறு நேற்று அழைப்பு விடுத்தது கட்சியின் தலைமை.
அதனை தொடர்ந்து, இன்று, மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார்.
இதனிடையே பாமக கூட்டணியை விட்டு வெளியேறியதால், தேமுதிகவுக்கு மத்திய சென்னை, தருமபுரி, கடலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர் என 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய அதிமுக முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ட்விட்டர் அஞ்சல்
விஜயபிரபாகரன் தேர்தலில் போட்டி
#BREAKING | தேமுதிக சார்பில் போட்டியிட விஜய பிரபாகரன் விருப்ப மனு#SunNews | #ADMK | #DMDK | #Elections2024 pic.twitter.com/n8y2VzZWzk
— Sun News (@sunnewstamil) March 20, 2024