LOADING...
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்
நகரின் பல முக்கிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 17, 2025
07:56 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. நகரின் பல முக்கிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர், வடபழனி, நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சைதாப்பேட்டை, K.K.நகர், விருகம்பாக்கம் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்தத் தொடர் மழையால் நகரின் பல சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வானிலை

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தமிழ்நாட்டில் இன்று முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் 24 ஆம் தேதி அன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதியானது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நெருங்கி, மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு நீடிக்கும்.