LOADING...
கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல்!
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாக கூறப்படுகிறது

கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல்!

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2025
11:06 am

செய்தி முன்னோட்டம்

கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவரை மூன்று மர்ம நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை தேடும் பணியில் ஏழு தனிப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தனது நண்பருடன் காரில் இருந்தபோது, மூன்று நபர்கள் அவர்களை அணுகி, மாணவியின் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

போலீஸ் நடவடிக்கை

குற்ற சம்பவமும் தொடர்ந்து போலீஸ் நடவடிக்கையும்

தாக்கப்பட்ட மாணவியின் நண்பர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தேடுதலின் முடிவில், மாணவி மயக்கமடைந்த நிலையில் கோவை விமான நிலையம் அருகே மறைவிடத்தில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குற்றவாளிகள் சம்பவத்தை நடத்துவதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு மோட்டார் பைக்கை திருடியிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொடூர குற்றத்தை செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய ஏழு சிறப்புத் தனிப்படைகளை காவல்துறை அமைத்துள்ளது. தற்போது குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர், அவர்களைப் பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர செயலுக்கு BJP தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post