
லவ் ரிவெஞ்: முன்னாள் காதலிக்கு 300 COD பார்சல்களை அனுப்பி பழிவாங்கிய கொல்கத்தா காதலன்
செய்தி முன்னோட்டம்
தனது பிரேக்-அப்பிற்கு 'பழிவாங்கும்' முயற்சியில், கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் வசிக்கும் சுமன் சிக்தர் என்ற 25 வயது நபர் தனது முன்னாள் காதலியின் ஷாப்பிங் ஆர்வத்தை பயன்படுத்தி பழிவாங்கியுள்ளார்.
நான்கு மாத இடைவெளியில், கிட்டத்தட்ட 300 தேவையற்ற கேஷ்-ஆன்-டெலிவரி (COD) பார்சல்களை அவரது வீட்டிற்கு அனுப்பி ரிவெஞ் எடுத்துள்ளார்.
இதனை கண்டுபிடித்த கொல்கத்தா காவல்துறையினர் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
இந்த காதல் ஜோடி கடந்த நவம்பர் 2024 பிரேக் செய்ததும், இந்த லவ் ரிவெஞ் நடவடிக்கையை சுமன் தொடங்கியுள்ளார்.
இதனால் கடுமையான மன உளைச்சலை அந்த பெண் சந்தித்தால் அவர் காவல்துறையினர் உதவியை நாடியுள்ளார்.
விவரங்கள்
தொடர்ச்சியான ஆர்டர்களினால் முடக்கப்பட்ட காதலியின் அக்கௌன்ட்
விலையுயர்ந்த கேஜெட்டுகள் மற்றும் ஆடைகளைக் கொண்ட தேவையற்ற பார்சல்களின் தொடர்ச்சியான டெலிவரி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முக்கிய மின் வணிக தளங்கள் பெண்ணின் கணக்குகளைத் தடுக்க வழிவகுத்தது.
யார் அனுப்புவது என தெரியாமல் அந்த பெண் குழம்பியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த அந்த பெண், கடந்த மார்ச் 2025 இல் அவர் ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், நதியாவைச் சேர்ந்த சிக்தர் என்பவர் தான் இந்த ஆன்லைன் ஆர்டர்களை கிடைத்தன, இதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, பழிவாங்கும் நடவடிக்கையாக இதை செய்ததாவும், காதலிக்கும் போது, தன்னால் வாங்க முடியாத அளவுக்கு அடிக்கடி பரிசுகள் வாங்கி தரச்சொல்லி டார்ச்சர் செய்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.