
கொல்கத்தா: 10 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தாவின் ஹரிதேவ்பூர் பகுதியில் உள்ள தனியார் பார்வையற்றோர் பள்ளி மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தின் இயக்குநர், அந்த இல்லத்தில் தங்கியிருந்த மைனர் சிறுமியை, தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து அந்த இல்லத்தின் இயக்குனர், முதல்வர் மற்றும் சமையல்காரர் உட்பட 3 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி விட்டதாக காவல்துறையினர் கூறினார்.
தொடர்ந்து, சம்மந்தப்பட்ட அந்த சிறார் பள்ளியும் சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கு குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
குழந்தை பராமரிப்பு இல்ல இயக்குனர் கைது
#Kolkata Police have arrested three persons, including owner of a private orphanage in Haridebpur on outskirts of the city, on charges of raping two minor inmates of the home for a prolonged period of time.
— IANS (@ians_india) September 7, 2023
The orphanage has been sealed by police after shifting its inmates to a… pic.twitter.com/C4wDND6WX0