பெங்களூருவிற்கு ரகசியமாக வருகை தந்த பிரிட்டன் மன்னர் சார்லஸ்; என்ன காரணம்?
பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, புத்தாக்க சிகிச்சைக்காக (wellness treatment) பெங்களூரு வந்துள்ளனர். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி பெங்களூரு வந்த இந்த அரச தம்பதிகள் வைட்ஃபீல்டில் உள்ள சவுக்யா சர்வதேச சுகாதார மையத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். இது ஒரு தனிப்பட்ட பயணம் என்பதால், அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த வெல்னஸ் மையத்தில் யோகா மற்றும் புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தம்பதி வாக்கிங் மற்றும் இயற்கை வேளாண்மையிலும், கால்நடை பண்ணைகளிலும் நேரத்தை செலவழிக்கிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது.
Twitter Post
மேலும் சில தகவல்கள்
இந்த வெல்னஸ் மையத்தை டாக்டர் ஜான் மத்தாய் நிறுவியுள்ளார். இதில் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, நேச்சுரோபதி போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. 30 வகையான தெரபிகள் உடல் உபாதைகளை தீர்க்க உதவுகின்றன. மன்னராக சார்லஸ் முதன்முறை இந்த மையத்திற்கு வந்திருந்தாலும், பதவியேற்பதற்கு முன்னர் 9 முறை இங்கு சிகிச்சை பெற்றதாக தகவல் கிடைக்கிறது. அதோடு, அவர் இங்கு மூன்று முறை தீபாவளியும், ஒருமுறை பிறந்த நாளும் கொண்டாடியுள்ளார். வயது முதிர்வு பாதிப்புக்கு எதிரான சிகிச்சை மற்றும் புத்தாக்க சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் தம்பதி, இன்றிரவு லண்டனுக்குப் புறப்பட உள்ளனர். மன்னர் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பிலிருந்து சம்பீபத்தில் மீண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.