6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே
சென்னை மத்திய பேருந்து நிலையம், கோயம்பேடிலிருந்து இடம்பெயர்ந்து கிளாம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை நகருக்கும் மற்ற இடங்களுக்கும் செல்வதற்கு வசதியாக மாநில அரசும், ரெயில்வே நிர்வாகமும் இணைந்து கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்சமயம் கிளாம்பாக்கத்திற்கு நேரடியாக ரயில் போக்குவரத்து இல்லை என்பது பெரும்குறையாகவே உள்ளது. எனவே புதிய ரயில் நிலையம் விரைவில் கட்டிமுடிக்கப்படும் எனவும். இன்னும் 6 மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வருமெனவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அதோடு, வில்லிவாக்கம் ரயில் நிலையம், புதிய ரயில் முனையமாக தரம் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்திற்கு அடுத்ததாக வில்லிவாக்கம் முனையம் உருவாக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.