கேரளாவில் பரவும் 'ஷிகெல்லா' பாக்டீரியா அபாயம்; தீவிரமாகும் அறிகுறிகள், தப்பிப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் 4 வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொற்று மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்பதால், பொது மக்கள் சுகாதார விதிகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுகாதாரத் துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மலக்-வாய் வழி, அசுத்தமான உணவு, தண்ணீர் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாகத் தொடுதல் மூலமாக இந்த 'ஷிகெல்லோசிஸ்' தொற்று மனிதர்களுக்குப் பரவுகிறது.
அறிகுறிகள்
ஷிகெல்லா தொற்று என்றால் என்ன? அதன் அறிகுறிகள்
ஷிகெல்லா என்பது மனிதனின் செரிமான பாதையில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா தொற்றாகும். முக்கிய அறிகுறிகள்: கடுமையான வயிற்றுப்போக்கு (வயிற்றுப்போக்கில் இரத்தம் கலந்து வருவது இதன் முக்கிய அடையாளம்) கடுமையான வயிற்று வலி மற்றும் பிடிப்பு அதிகப்படியான காய்ச்சல் குமட்டல் மற்றும் வாந்தி உடலில் நீர்ச்சத்து முற்றிலும் குறைதல்
கவனம்
யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்?
இந்தத் தொற்று சாதாரண மனிதர்களை காட்டிலும் சில குறிப்பிட்ட பிரிவினரை கடுமையாகப் பாதித்து உயிரிழப்பு வரை கொண்டு செல்லக்கூடும். 1. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்: இவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாததால், மிக எளிதாகப் பாதிப்பிற்குள்ளாகி தீவிர நீர்ச்சத்து குறைபாட்டைச் சந்திக்கிறார்கள். 2. முதியவர்கள்: வயது முதிர்வு மற்றும் ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக இவர்களின் உடல் பாக்டீரியாவை எதிர்க்க முடியாமல் பலவீனமடைகிறது. 3. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள்: எச்.ஐ.வி, புற்றுநோய் சிகிச்சை பெறுவோர், நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் ஆபத்தில் இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கிறார்.