கேரளாவில் ஒரே நாளில் 292 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவு, 2,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளில் 88% பாதிப்புகள், கேரளாவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவிற்கு கடந்த 24 மணி நேரத்தில், இருவர் உயிரிழந்த நிலையில், மாநிலத்தின் மொத்த உயிரிழப்புகள் 72,056 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கேரள சுகாதார அமைச்சகம் வழங்கவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பின்னர், இந்த தரவுகள் மாநில அரசால் வழங்கப்படவில்லை.
2nd car
எர்ணாகுளம், திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில், நேற்று முன்தினம் உயர் மட்ட அலுவலர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகப்படியான தொற்று எண்ணிக்கை பதிவாகும் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கோவிட் நோய்த்தொற்றுகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகளை சுகாதார அமைச்சர் திங்களன்று மறுத்தார்.
நவம்பர் மாதத்திலிருந்து நோய்த்தொற்றுகளின் சிறிய அதிகரிப்பு குறித்து சுகாதாரத் துறை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது உலக அளவில் வேகமாக பரவி வரும் JN.1 வகை கொரோனா தொற்று, இம்மாதத்தின் முதல் பாதியில் கேரளாவில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.