Page Loader
அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை! 
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை! 

எழுதியவர் Siranjeevi
May 01, 2023
01:12 pm

செய்தி முன்னோட்டம்

கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தில் மழை அவ்வவ்போது பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேப்போல், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர், பத்தனம்திட்டா, ஆகிய 4 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களுக்கு 24 மணிநேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளனர். இதேப்போன்று, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மற்றும் கோட்டயம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post