
'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி
செய்தி முன்னோட்டம்
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று தானாக முன்வந்து போலீசில் சரணடைந்த டொமினிக் மார்ட்டினை காவல்துறையினர் "அதி புத்திசாலி" என்று வர்ணித்துள்ளனர்.
டொமினிக் மார்ட்டின் கேரளாவுக்கு திரும்புவதற்கு முன் வளைகுடாவில் அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் பணிபுரிந்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது, வெடிகுண்டு தாக்குதலுக்கான நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த ஒரு கிறிஸ்தவ குழுவின் வழிபாட்டு கூட்டத்தில் திடீரென்று 3 குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்புகளால் 3 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் வெளியானதும் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
பிவெனி
மார்டினின் நோக்கம் என்ன என்பதை விசாரித்து வரும் போலீசார்
இந்நிலையில், சம்பவம் நடந்த அதே நாள் மாலை கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர், குண்டுவெடிப்புக்கு தானே காரணம் என்று கூறி கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
நேற்று, சிறப்புப் புலனாய்வுக் குழு மார்ட்டினை ஆலுவா அருகே உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றது.
மார்டினின் வீட்டில் தான் வெடிபொருட்கள் அசெம்பிள் செய்யப்பட்டதாக நம்பப்படுவதால், அவரது வீட்டில் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புலனாய்வுக் குழுவினர் அவரை அங்கு அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து, அவர் எப்படி வெடிகுண்டு தாக்குதலை திட்டமிட்டார் என்பதை மார்ட்டின் போலீசாருக்கு விளக்கினார்.
பிஜேக்
வழக்கறிஞரின் உதவி தேவையில்லை என்று மறுத்த மார்ட்டின்
அவர் ஞாயிற்றுகிழமை சரணடையும் போதே, வெடிகுண்டை உருவாக்குவதற்கு அவர் வாங்கிய பொருட்களின் ரசீதுகளை காவல்துறையில் ஒப்படைத்துவிட்டார்.
எனினும்,அவருக்கு எதிரான உறுதியான ஆதாரத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், "அதிபுத்திசாலித்தனம் மற்றும் விடாமுயற்சி" கொண்ட நபர் என்று மார்டினை காவல்துறையினர் விவரித்துள்ளனர். எனினும், அவர் அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையை விட்டுவிட்டு எதற்காக இந்தியா திரும்பினார் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எலெக்ட்ரானிக்ஸ் துறையில் அவருக்கு அதிக திறமை இருப்பதால், இந்த வழக்கின் மர்மம் மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மார்ட்டின் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆனால், வழக்கறிஞரின் உதவி தனக்கு வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டார். தானே தனக்காக வாதிட்டு கொள்வதாக கூறிய அவர், நிதிபிரச்சனை இருக்கிறதா என்ற கேள்விக்கும் மறுப்பு தெரிவித்துவிட்டார்.