NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை 

    குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை 

    எழுதியவர் Sindhuja SM
    May 07, 2024
    02:07 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2022 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாக அமலாக்க இயக்குனரகம் (ED) உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) பிரச்சாரத்திற்காக சட்டவிரோத நிதியை நிர்வகித்த சன்பிரீத் சிங், இந்த செலவுகளுக்கு பணம் கொடுத்ததாக ED குற்றம் சாட்டியுள்ளது.

    மக்களவை தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்து வருகிறது.

    கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுப்பதற்கு எதிராக வாதாடி வரும் அமலாக்க இயக்குனரகம், இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    டெல்லி மதுக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.

    இந்தியா 

    தொழிலதிபர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் பெற்றார் கெஜ்ரிவால்: ED

    ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நீதிமன்றக் காவலில் உள்ளார்.

    ஊழல் மூலமாக கிடைத்த சட்டவிரோத நிதியில் ஆம் ஆத்மி அதிகமாக பயனடைந்ததாக அமலாக்க இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது.

    கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் நடத்த ஆம் ஆத்மி கட்சி அந்த பணத்தை செலவழித்ததாக ED குற்றம் சாட்டியுள்ளது.

    தொழிலதிபர்களுக்கு சாதகமாக மதுபானக் கொள்கையை உருவாக்குவதற்காக அவர்களிடம் இருந்து 100 கோடி ரூபாயை கெஜ்ரிவால் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அமலாக்க இயக்குனரகம் கூறியுள்ளது.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    டெல்லி

    27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய் பல்கலைக்கழகம்
    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு  தெலுங்கானா
    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி அரவிந்த் கெஜ்ரிவால்
    கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன் அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆம் ஆத்மி

    2024 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு மக்களவை
    ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சாதாவை கரம் பிடித்தார் 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ரா பாலிவுட்
    ஆம் ஆத்மிக்கு விழுந்த அடுத்த அடி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் எம்பி சஞ்சய் சிங் டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்  டெல்லி
     மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 நிதியுதவியை அறிவித்தது டெல்லி அரசு டெல்லி
    டெல்லி ஜல் போர்டு ஆலையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நபர் பலி  டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025