
கேதர்நாத் யாத்திரை முன்பதிவு கடும் பனிப்பொழிவால் நிறுத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் கேதர்நாத் ஆகிய 4 தளங்கள் இந்துக்களின் முக்கியமான புனித தளங்களாகும்.
இந்த தளங்களுக்கு பக்தர்கள் மேற்கொள்ளப்படும் யாத்திரை 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இந்த தளங்களுக்கு ஒரு ஆண்டில் 6 மாதங்களுக்கு மட்டுமே சென்று அங்குள்ள கோயில்களுக்கு சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும்.
மற்ற நாட்களில் இந்த பாதைகளில் பனி பொழிவு அதிகமாக ஏற்பட்டு பனியானது பாதையினை மறைத்துவிடும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம்.
அதற்கேற்றாற்போல் குளிர்காலங்களில் இந்த குகை கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான இந்த தளங்களின் யாத்திரை பயணம் கடந்த மாதம் முதல் துவங்கியது.
யாத்திரை
முன்பதிவானது நாளை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
மேற்கூறியவாறு இந்தாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்களுக்கான யாத்திரை துவங்கிய நிலையில், ஏப்ரல் 25ம் தேதி கேதார்நாத் கோயிலின் யாத்திரையும், ஏப்ரல் 27ம் தேதி பத்ரிநாத் கோயிலுக்கான யாத்திரையும் துவங்கியது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கேதார்நாத் பகுதியில் கடும் பனிப்பொழிவு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
கேதர்நாத் கோயிலுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கூடாரம் போட்டு தங்க கூடிய பகுதிகளில் பனியானது அடர்த்தியாக படர்ந்துள்ளது.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பினை மனதில் கொண்டு மே மாதம் 3ம் தேதி வரை இந்த யாத்திரைக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வானிலை மாற்றத்தினை பொறுத்தே அடுத்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.