Page Loader
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம்
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - ராமேஸ்வரத்தில் இருந்து மக்கள் பயணம்

எழுதியவர் Nivetha P
Mar 03, 2023
10:30 am

செய்தி முன்னோட்டம்

ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தொலைவும், இலங்கையில் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது தான் கச்சத்தீவு. 285 பரப்பளவில் அமைந்துள்ள இந்த கச்சத்தீவில் சீனிகுப்பன் படையாட்சி என்பவர் 1913ம் ஆண்டு அந்தோனியார் தேவாலயத்தை கட்டியுள்ளார். இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வருடாந்திர திருவிழா நடைபெறும், தவக்கால யாத்திரையும் நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்தாண்டு திருவிழா மார்ச் 3, 4ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்ட 2408 பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இலங்கையில் இருந்தும் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வரவுள்ளன.

ஒற்றுமை திருவிழா

72 படகுகளில் முழு பாதுகாப்புடன் மக்கள் பயணம்

ராமேஸ்வரத்தில் உள்ள மீன் இறங்கு தளத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 12 நாட்டு படகுகள் என மொத்தம் 72 படகுகளில் மக்கள் முழு பாதுகாப்புடன் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்கள். ஒற்றுமை திருவிழா என கூறப்படும் இந்த நிகழ்வுக்கான பயணத்தினை ராமநாதபுர ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். இயற்கை சீற்றம், புயல் போன்ற இயற்கை சீற்ற காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் புனித அந்தோணியாருக்கு வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்கு செல்வது இப்பகுதி மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.