Page Loader
கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!
செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!

கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்!

எழுதியவர் Arul Jothe
May 17, 2023
05:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் கரூர் மாவடத்தில் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி என்பவர் முட்டை வியாபாரம் செய்கிறார். ஒரு மாதம் முன்பு வியாபாரத்திற்கு சென்ற போது மீன் வியாபாரி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையம் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்று 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். 3 மணி நேரத்திற்கும் மேலாக, டவரிலேயே இருந்த செல்வி, குடும்பத்தினர் ஒலிபெருக்கியில் வரச் சொல்லியும் கூட, இறங்கி வர மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறிய பின்னரே கீழே இறங்கி வர சம்மதித்தார்.

Karur

தீயணைப்புப் படை வீரர்கள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கபட்டார் 

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக இறக்க தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டனர். செல்போன் டவர் மீது ஏறி அவரது இடுப்பில் கயிறு கட்டி கீழே கொண்டு வந்தனர். பாதுகாப்பாக இறக்கப்பட்ட பின், செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக தாந்தோணிமலை கடைவீதி சாலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் போக்குவரத்து இடையூறுகளும் ஏற்பட்டது.