
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி கர்நாடகா அரசு கடிதம்
செய்தி முன்னோட்டம்
சொத்து குவிப்பு வழக்கின் போது ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஒப்படைக்குமாறு கர்நாடக அரசின் வழக்கறிஞர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அப்போது, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு, அதை வைத்து சொத்துக் குவிப்பு வழக்கிற்கு செலவிட்ட தொகையை கர்நாடக அரசு ஈடு செய்ய உள்ளது.
இதற்கு, மாநகர நீதிமன்றமும் அனுமதி அளித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருக்கும் ஜெயலலிதாவின் பொருட்களை மீட்க, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் கிரண் எஸ் ஜவாலி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொருட்களை வழங்க கோரி கடிதம்
#JUSTIN மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொருட்களை வழங்க கோரி கடிதம்#Jayalalithaa #TNGovt #Karnataka #news18tamilnadu | https://t.co/IFMXDS8qCu pic.twitter.com/6XjPexbz1W
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 4, 2023