
கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா மாநிலத்தில் வரும் மே-மாதம் 10ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கு பாஜக மாநிலப்பொறுப்பாளாராக தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்காரணமாக அண்ணாமலை பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சார வியூகம் என தீவிரமாக பணியாற்றிவருகிறார்.
இந்த சூழலில் கவுட் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சோரகே அண்ணாமலைக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
அதாவது சமீபத்தில் பாஜக அண்ணாமலை அவர்கள் உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அப்போது அண்ணாமலை ஹெலிகாப்டரில் தன்னுடன் கட்டுக்கட்டாக பணத்தினை கொண்டு சென்று உடுப்பி வாக்காளர்களுக்கு அளித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்டத்தேர்தல் அதிகாரியிடமும் புகாரளித்துள்ளார்.
இதுபெரும் சர்ச்சையினை கிளப்பியுள்ள நிலையில், அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
பாஜக
உடுப்பி தேர்தல் அதிகாரி தகவல்
அதன்படி அவர் கூறியுள்ளதாவது, நான் ஒரு சாமானியன், எங்களின் கொள்கை வேறு.
நேரம் வீணாவதை தவிர்க்கவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.
மொத்தம் 5நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனால் அவசரமாக செல்ல வேண்டியநிலை ஏற்பட்டதால் தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.
சூல்யா,தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்றுதூரமாக உள்ள இடங்கள்.
அனைத்து இடங்களுக்கும் சரியான நேரத்திற்கு செல்லவேண்டும் என்பதால் தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.
நாங்கள் நேர்மையானவர்கள். அவர்களைப்போல் எங்களை நினைத்து, தோல்விபயத்தில் எங்கள்மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் வைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து உடுப்பி தேர்தல்அதிகாரி சீதா கூறுகையில், உடுப்பிக்கு வந்த அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் சில பைகள் இருந்தன.
அவற்றை அதிகாரிகள் ஆய்வுச்செய்தப்பொழுது தேர்தல்விதிகள் மீறும்வகையில் அதில் ஒன்றுமில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.